ஜெர்மனியில் பொம்மைகளால் நிறைந்த அச்சத்தையூட்டும் "அமானுஷ்ய காடு"

Keerthi
2 years ago
ஜெர்மனியில் பொம்மைகளால் நிறைந்த அச்சத்தையூட்டும் "அமானுஷ்ய காடு"

ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் அச்சத்தை உண்டாக்கும் பொம்மைகளை மரங்களில் கட்டி தொங்கவிடபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது.

புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களின் பசியை போக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. இரவு நேரங்களில் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த காட்டிற்கு செல்வதற்கு பயமாக உள்ளதாம். ஏனென்றால் அக்காட்டில் உள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கிறதாம். கொடூர முகபாவங்கள் கொண்ட பொம்மைகள்,கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பொம்மைகள், பயங்கர முக பாவத்துடன் உள்ள பொம்மைகள், கோமாளி வேடத்தில் சில பொம்மைகள் என ஒவ்வொரு பொம்மையும் ஒருவித அச்சத்தை கொடுக்கும் படியாக இருக்கிறது.

ஜெர்மனை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்த காட்டுக்குள் சென்று உள்ளாராம். தற்போது மீண்டும் அவர் சென்றபோது அந்த காடு எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே அச்சத்தை உண்டாக்கும் வகையில் இருக்கின்றதாம். மேலும் புகைப்படக் கலைஞர் ஒருவர் தப்பி தவறி கூட அந்தக் காட்டுப் பக்கம் போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.